Monday, May 30, 2011

எங்கேயும் காதல் விமர்சனம்



நடிப்பு: ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி, ராஜு சுந்தரம், சுமன் 
இசை: ஹரீஸ் ஜெயராஜ் 
ஒளிப்பதிவு: நீரவ் ஷா 
திரைக்கதை - இயக்கம்: பிரபுதேவா
 தயாரிப்பு: கல்பாத்தி அகோரம் 
வெளியீடு: சன் பிக்சர்ஸ் 
ஒரு மென்மையான காதல் கதையை முற்றிலும் வெளிநாட்டு லொகோஷனில் கவிதையாய் சொல்ல வேண்டும் என்பது இயக்குநரான பிரபு தேவாவின் ஆசை. அதில் தப்பேதுமில்லை. அதற்காக காட்சியமைப்புகளில் கொஞ்சம் மெனக்கெட்டிருப்பதும் தெரிகிறது.பெண்களை ருசிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட, காதலை வெறுக்கும் கார்ப்பரேட் ஜாலிப் பேர்வழி ஜெயம் ரவியைப் பார்த்த மாத்திரத்தில் உருகி உருகிக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் பாரீஸ் பெண் ஹன்ஸிகா மோத்வானி. ஆனால் காதலைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார். இருவரும் காதலில் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.ராஜூ சுந்தரம் நகைச்சுவை என்ற பெயரில் காதில் இரத்தம் வர வைக்கிறார்.ஒரு காட்சியில் வந்தாலும் பிரகாஷ் ராஜ் ஈர்க்கிறார். சுமன் ஹீரோயினுக்கு அப்பாவாக வருகிறார்;.சின்னச் சின்ன விஷயங்களுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்ட இயக்குநர் பிரபுதேவா, மனதை வருடும்படியான ஒரு நல்ல திரைக்கதையை உருவாக்கத் தவறியது, எங்கேயும் காதலை, என்ன படம் போங்க என்று கிண்டலடிக்க வைத்துள்ளது.

No comments:

Post a Comment