ஐந்து தரப்பு மனிதர்களின் வாழ்வியல்,அவர்களின் பின்புலம்,எதிர்பார்ப்பு,ஏக்கம் என வானம் என்ற குடையின் கீழுள்ள மேகக்கூட்டங்களைப் போல விரிகிறது கதை. நன்றாக படிக்கிற மகனை கந்துவட்டிக்கு காவு கொடுக்கிற நிலைமை அம்மா சரண்யாவுக்கும் அவனது தாத்தாவுக்கும். ரெண்டே ஜாதிதான். ஒண்ணு ஏழை, இன்னொன்னு பணக்காரன். நாம காஸ்ட் மாறணும்டா... கொள்கையை நிஜமாக்க பணக்கார பெண்ணை ஜுட் விட துடிக்கும் சிம்பு. என்ன வாழ்க்கைடா இது எனும் கேபிள் ராஜாவின் வசனம் super.அவள் கேட்கும் நியூ இயர் பார்ட்டிக்காக 40 ஆயிரத்தை தேற்றுவதற்காக திருடவும் துணிகிறார். அவர் திருடுவது கிட்னி விற்ற பணத்தை. கோயமுத்துர் பிள்ளையார் ஊர்வல கலவரத்தில் தம்பியை தொலைத்துவிடும் அண்ணன் பிரகாஷ்ராஜ் சென்னைக்கு தேடி வர, வந்த இடத்தில் தீவிரவாதி முத்திரைக் குத்தப்பட்டு போலீஸ் கஸ்டடியில்.
ராப் இசையில் முதலிடத்தை பிடிப்பதற்காக பெங்களூர் பிளைட்டை தவறவிட்டு சென்னைக்கு தரைவழி பயணமாக வருகிறது பரத்-வேகா ஜோடி. வந்த இடத்தில் செய்வது ரெட்லைட் வேலை. அதையும் சுய தொழிலாக சொந்தமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் அனுஷ்கா. இந்த தனி தனி கதைகளை தனித்துவம் கெடாமல் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார் கிருஷ். அங்கு நடப்பது என்ன? அதுதான் முடிவு. முதல் சில நிமிடங்கள் ரேடியோவுக்குள் எலி புகுந்த மாதிரி என்னென்னவோ செய்கிறது. அதிலும் சிம்புவை வில்லன் கோஷ்டி துரத்துவது அரத பழசான கொட்டாவி. அதற்கப்புறம் நுல் பிடித்தார் போல நம்மை ரசிக்க வைக்கிறார்கள். அதிலும் சிம்பு-சந்தானம் காம்பினேஷன் கரெச்சல்! இதற்கு தனுஷ் நயன்தாரா கூட தப்பவில்லை. இவர்களுடன் சேர்ந்து கொண்டு படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷம் கூத்தடிக்கிறார். பிள்ளைய காணும்னு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்தா பொண்டாட்டியையும் தொலைச்சுட்டு போற இடம்டா இது என்று போலீஸ் ஸ்டேஷன் பற்றி இவர் கொடுக்கும் வர்ணனை அபாரம். திருடிய நாற்பதாயிரத்தை நட்சத்திர ஓட்டலில் கட்ட வருகிற காட்சியிலும், அந்த பணத்தை திரும்பவும் பெரியவர் ரூமிற்கு முன்பு வைத்துவிட்டு மறைந்து நின்று பார்க்கிற காட்சியிலும் சிம்பு பேசாமலே கதற வைக்கிறார்!
பரத்தின் 'ஹ¨ ஆம் ஐ' யை கேட்கிற அளவுக்கு பார்க்க முடியவில்லை. ஒரே காரணம் பரத்! எவன்டி உன்னப் பெத்தான்... சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்து படைகிற பாடல். அனுஷ்காவை இன்னும் கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாமே என்பது ரசிகர்களின் ஏக்கம். தெய்வம் வாழ்வது எங்கே... என்று பல இடங்களில் ஒலிக்கும் யுவனின் குரல் சலிக்கவில்லை. வானம் ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்தாலும் இதில் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, தீவிரவாதிகள் மருத்துவமனையின் நோயாளிகளையும் பணியாளர்களையும் சரமாறியாக சுட்டு வீழ்த்துவது கர்ன கொடூரம். மும்பையில் நடந்த நிகழ்வைத் தான் எடுத்திருக்கிறார்கள் என்று நம்மை யூகிக்க வைக்கிறார்கள். படத்தில் காட்டப்படும் தீவிரவாதியின் வசனம் இது, சென்னைல குண்டு வச்சா வெடிக்காதா என்ன... வெடிக்கும்!
வானம்-சிம்புவின் போதிமரம்!